அன்றாட சுத்தமல்ல
அந்தம் தொட்டு
ஆதி வரையுள்ள
மொத்தமான புண்ணிய சுத்தம்
புத்துணர் சுத்தம்
உண்மை உளச் சுத்தம்.
இதை நாமாக சொல்ல வில்லை
அல்லாஹ்வே சொல்லுகிறான்.
அஹ்லுல்பைத்தினரே! உங்களை விட்டும் சகல விதமான அசுத்தங்களை நீக்கிஇ உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகின்றான். (33:33)'
இமாம் திர்மிதி அம்ர் இப்னு அபீஸல்மா கூறியதாக அறிவிப்பது. ஆயதுத்தத்ஹீர் என்ற வஸனம் ஹஸரத் உம்மு ஸல்மா நாயகியின் வீட்டில் வைத்து இறைத்தூதருக்கு இறங்கியபோது ஹஸரத் பாத்திமா இமாம்ஹஸன் இமாம்ஹுஸைன் ஆகியோரை அழைத்து (அனைத்துக் கொண்டு) ஹஸரத் அலிக்கும் தன்பின்புறத்தில் இடம் கொடுத்து தனது போர்வையினால் எல்லோரையும் போற்றிவிட்டு இறைவனை நோக்கி (ஆதாரம்; ஸஹீஹ் முஸ்லிம் (நவவி) பாக:15 பக்:195)
புதல்வி பாத்தமா
பக்கமாக வரீர்
அலியே நீரும்
அருகே வரீர்
சுவனச் செல்வங்களே
ஹஸனும் ஹ_ஸைனும்
சுற்றி வரீர்
யாஅல்லாஹ் இவர்களே
என் அஹ்லுல் பைத்துகள்.
மனிதர்களே!!
இந்தப் போர்வைக்குள்
நடந்தது கனவு அல்ல
கேட்டுவிட்டு மறந்து விட
இவர்களே!!
போர்வைக்குறியவர்களும்
போற்றப்பட வேண்டியவர்களும்.
இதை நாமாக போற்ற வில்லை
நபிகளாரே போற்றி சொன்னார்கள்.
'இறைவா இவர்கள்தான் எனது அஹ்லுல்பைத்தினர். எனவே இவர்களைவிட்டு சகல வித அசுத்தங்களையும் நீக்கி தூய்மைப்படுத்தி சுத்தப்படுத்துவாயாக' என்றார்கள் உடனே ஹஸரத் உம்முஸல்மா அவர்கள் நாயகத்தை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நானும் அவர்களுடன் இருக்கின்றேனா? என வினவியதற்கு நீர் உமக்குள்ள இடத்தில் இருந்துகொள்ளும் ஆனால் நீர் நல்லோர்களில் உள்ளவராவீர் என்றார்கள். (ஆதாரம் திர்மிதி பாக-2 பக்- 290 ஹ 3787)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக