நாமாக பிரிக்கவில்லை 07

சுத்தமென்றால் அது
அன்றாட சுத்தமல்ல
அந்தம் தொட்டு
ஆதி வரையுள்ள
மொத்தமான புண்ணிய சுத்தம்
புத்துணர் சுத்தம்
உண்மை உளச் சுத்தம்.

நாமாக பிரிக்கவில்லை 06

நாங்கள் ஒவ்வொரு மனிதனையும் அவரவர் இமாம்களுடன் எழுப்போம் (இஸ்ரா 71)

வசனத்தில் வதந்திகளில்லை.
வாழ்வுக்குப் பின்
யாரோடு எழுப்படுவோம் என்பதில்
வழியில் உறுதி இருக்கிறதா?

நாமாக பிரிக்கவில்லை 05

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார். மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40


இறைத்தூதர்
இறைபோன பின்னே!
இறை நேசர்
இல்லா பூவுலகை

நாமாக பிரிக்கவில்லை 04

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும்இ நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)


இல்லாதை இருக்கு
என்று சொல்லின்.
நானே எனக்கு
சாபமிடுவதில் சாட்சி.
நம்புகிறீரா?
நாய நபி வஹியை.

நாமாக பிரிக்கவில்லை 03

தவறு செய்யாதவரை
தவறு காண்பதில்
எனக்கு தேவை இருக்கா?

நாமாக பிரிக்கவில்லை 02

ஆண்மீகத் தேடலுக்கு
இந்த அறிவியல் சிந்தனையே
முதல் புத்தம்
அதை புரட்டுவதில்
புதியதொரு புரட்சி

கோதரா நீயும் முயற்சி.

நாமாக பிரிக்கவில்லை 01

வரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல.