இறைவா
உந்தன் தூய்மை சொல்ல
வார்த்தைகள் இல்லை
உன்னை சொல்ல மறந்தால்
வாழ்க்கையே தொல்லை
வாழ்வே இல்லை
என் உம்மத்தின்
உயர்வுக்காய்
உறுதியாகச் சொல்லி
உன்னை தெளிவுபடுத்துகிறேன்.
தெரியாத் தவறாய்
உன் தௌஹீதில் தவறிழைத்தால்
தண்டிக்காது மன்னித்திடு!
நான்கு வசனத்தில்
நமக்களித்தாய்
நீ அல்லாஹ்
நீயே! தனித்தவன் என்று...
உந்தன் சிறப்பை சொன்னாய்
நீ தேவையற்றவன் என்று...
உந்தன் இருப்பை சொன்னாய்
பிறக்கச் செய்தவர் யாருமில்லை
பிறப்பெடுத்தவர் எவருமில்லை என்றும்...
இறுதியாக
உறுதியாக சொன்னாய்
உன் உவமைக்கு
ஒன்றுமே இல்லையென்று...
நான்கு வசனத்தில்
தெளிவு படுத்திய நீ
நடுவானுக்கு வருவதென்பது
அந்நாளை சிறப்பிக்கும் சொற்றுடர்தானே!
அந்நாளில் அமலுக்கு ஆர்வமூட்டும்
அருள் வசனம்தானே!
ஆனால் ஏனோ!
என் சகோதரனுக்கு
சறுக்கல் இடுகிறது.
உன் வருகைக்கு
உருவத்தை உண்டாக்கி
உயரிய ஈமானை துண்டாக்கிறான்.
தேவையே உனக்கில்லை
என்றபோதும்…
உருவம் தேடி
உண்டாக்கிறான் தேவையும்.
மன்னித்திடு
அவனை தெளிவுபடுத்த
தேவை எனக்கிருப்பதால்
தேடிச் சொல்கிறேன்.
உரு ஒன்றிருப்பதில்
மண் தூசிக்கும்
திசை தேவை
இருப்பதில் இடம் தேவை
இது நியதி!
நீ அர்ஷில் இருப்பது
உன் ஆட்சி குறிப்பது
இவனுக்கு தெரியாதா?
அர்ஷ் என்பது
சிம்மாசனம் குறிக்கும்
அரபுச் சொல்லானாலும்
அது ஆட்சி குறிக்;கும்
அறிவுச் சொற்றுடர்
இவனுக்கு புரியாதா?
அவர்கள் எரிய வில்லை
நாங்களே எரிந்தோம்
என்பது செயலானாலும்
உனது உதவிச் சொல்லும்
உறுதிச் சொற்றுடர் என்பதும்
புரியாதா?
நடுவானத்தில் வருகிறேன்
என்பது வருகையானாலும்
அவனது கருணை சொல்லும்
கரிசணை என்பது
இவனுக்கு விளங்காதா?
தவறுக்கெல்லாம் காரணம்
தௌஹீதையறியா தாத்பரியம்தான்
நீ படைப்பாளன்
பலதுக்கும் முழுதுக்கும்
படைப்புகளுக்கு மாறுபட்டவன்
என்றிருக்க உருவமே
நீ படைத்ததுதான்
என்பது அவனுக்கு
இன்றாவது புரியும்
உரும் உனக்கு தேவையில்லை
திசையும் உனக்கில்லை
என்பது என்றாவது தெரியும்
உன் அர்ஷ் என்ற போது
அறியாமை சகோதரனுக்கு
காவல் நிறைந்த
கதிரைதான் கற்பனைக்கிறது.
உன் பார்வை என்ற போது
தெளிவில்லா தோழனுக்கு
அவன் பார்வைதான் தோன்றுகிறது.
உன் கை என்ற போது
கல்வி இல்லா உறவுக்கு
அவனது கையே
கல்புக்குள் நடக்கிறது.
நீ வருகிறாய் என்ற போது
முன் ஒன்று வைத்து
பின் ஒன்று வைத்து வரும்
அவன் நடையே ஞாபகிக்கிறது.
சகோதரா!
தெரியா ஒன்றை சொல்லி
தெளிவு படுத்த முடியாது
அறியா ஒன்றை சொல்லி
அறிவிக்க முடியாது
அதற்காக…
அவனே அவனுக்கு
உவமை செய்தான்
அர்ஷில் அமர்ந்திருப்பதாக…
நடுவானுக்கு வருவதாக…
எரிந்ததாக…
அவனை அவன்
தெளிவு படுத்தா விட்டால்
அறிவுடமையாகாது
அவனை அவன்
உவமை செய்வதில்
நிபாக் உண்டாகாது.
அவனே அவனுக்கு போதும்
இறைவா!
என் சகோதரனுக்கு
நீயே தெளிவைக் கொடு!
நேசமிட்டு நேர்வழி கொடு!