நாமாக பிரிக்கவில்லை 06

நாங்கள் ஒவ்வொரு மனிதனையும் அவரவர் இமாம்களுடன் எழுப்போம் (இஸ்ரா 71)

வசனத்தில் வதந்திகளில்லை.
வாழ்வுக்குப் பின்
யாரோடு எழுப்படுவோம் என்பதில்
வழியில் உறுதி இருக்கிறதா?

அல்லாஹ் தஆலா எம் ஒவ்வொருவரையும் தங்களது இமாமுடன் எழுப்புவான் என்கிறான். அதனால் எமது இமாமை நாம் அறிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த வினாவுக்கு விடைதெரியாது நாம் மரணித்தால் எமது மறுமை வாழ்க்கை வேதனையாகிடும். அல்லாஹ் எனது நாயன் என்றும், நபி முஹம்மத் (ஸல்) என்றும் குர்ஆன் கிதாபு என்றும், கஃபா கிப்லா என்றும், முஸ்லிம்கள் உம்மத் என்றும் விடையளிக்கலாம். இமாமை யார் என்பது தெரிந்து கொள்வோம் தேடிக் கொள்வோம்.

பொருமான் பெற்றறிவை
குணித்து கொடுத்தார்கள்.
என் பிரதி நிதிகள்
பின் உள்ளவரை
இப்பூமி சுழலுமென்று…

என் குடுபத்திலிருந்து
குறையில்லா நிறையானவர்கள்
நியமிக்கப்பட்டு நிர்ணயிக்கப்படுவர்
12 பேர் என்று…

நாமாக சொல்ல வில்லை
நபிகளாரே சொல்லுகிறார்.

'மறுமை நாள் வரும் வரை அல்லது குறைஷிகளைச் சேர்ந்த பன்னிரண்டு கலீபாக்கள் உங்கள் மீது வரும் வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். (புஹாரி - பாக 3 - பக் 101இ திர்மிதீ - பாக 4 - பக் 50இ அபூதாவுத் - பாக 4 - கிதாபுல் மஹ்தி

சிற்றறிவு கொண்டதெல்லாம்
சிந்தனையுடையவர்தான்
அதற்காக…
எவர்களெல்லாம் இமாமாக முடியாது

பெற்றறிவும் பேரறிவும் கொண்டவரும்
பக்குவம் கண்டவருமே
தகுதியானவர்.

இவர்கள் குருதிக்குள்
 ரிஸாலத் குடிகொண்டிருக்கும்

'இன்னும். இப்ராஹீமை அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் என்பதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக மனிதர்களுக்கு நான் உம்மை இமாமாக ஆக்குகின்றேன் என அல்லாஹ் கூறினான். அதற்கு அவர் என்னுடைய சந்ததியிலிருந்தும் (இமாம்களை ஆக்குவாயா?) எனக் கேட்டார். அதற்கு இறைவன் அநியாயக் காரர்களை எனது வாக்குறுதி சேராது எனக் கூறினான்.' (02: 124)

ஏ! குடும்பத்தினரே!
நிச்சயமாக சத்தியமாக
நான் உறுதியளிக்கிறேன்
உங்களை தூய்மை செய்வதையே

நீங்கள் அசுத்தமற்றவர்களாக
இருப்பதற்காக…
அடுத்தவர்களுக்கு
ஆசான்களாக படிப்பிப்பதற்காக…

கருத்துகள் இல்லை: