கர்பலா

கண்னை கசக்கி
கர்பலா களத்தை
காட்சிக்கு கொண்டு வர
கற்பனை ஓவியமோ
காதல் காவியமோ அல்ல

கயவர்கள் செய்த
காட்டு மிருகத்தனமது.
உயிர்பரிக்கப்பட்ட
பரிதாப நிலை
பலருக்கு சான்று…
தாகதத்தின் அழுகையும்
குழந்தைகளின் ஏக்கங்களும்
உதிர ஓட்டமும்தான்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு …
மறுக்கப்பட்ட உண்மைக்கு
மறைக்கப்பட்ட தூதுக்கும்
ஒரே சான்று…..

கருத்துகள் இல்லை: