ஒரு சத்தம் எழும்பியது
உம் பிறந்த நாள் எழுத
சந்தர்ப்பம் கொடுத்தவனுக்கும்
கொடுத்தவர்களும் நன்றி
நானே கூறவேண்டும்.
ஒரு முறையே பிறந்தீர்
ஆனால் ஒவ்வொரு நாளும்
உம் பிறப்பிற்காக
எழுத துடிக்கிறது
என் வரிகள்.(2)
உம்மை வாழ்த்துவதா
நீர் பிறந்த நாளை வாழ்த்துவதா?
வஹி மொழி எழுகிறது.
உம் பிறப்பால்தான்
அந்நாளுக்கு சிறப்பென்று.
நபி மூஸா சமூகத்திற்கு
உணவிறங்கிய
அந்நாள் பெருநாளென்றால்
அஹ்லுல் பைத் அவதரித்த நாட்களும்
அழகிய திருநாள்தான்.
அவன் சாதனையில்
உம் பிறப்பெல்லாம்
முதன்மையில் முழு வடிவம்
அவன் புத்தக ஏட்டில்.(2)
நீர் பிறந்த பிறகுதான்
உம் துனைவிக்கு
பெயர் வைத்தார்கள்
பாத்திமா என்று
கஃபா சுவாசத்தில்
சுமை இறக்கி
உம் தாய்க்கு தாய்மையும்
எமக்கு இமாமையும் தந்தது.
நீர் அபுதாலிபுக்கு
அருள் மகனே
நபிகளாருக்கு
நாளுமறிந்த நன்பரே!
பாத்திமாவுக்கு
பாசம் கொடுத்த கணவரே
ஹஸன் ஹ-_ஸைனுக்கு
கையேந்திய தைந்தையே
நீ பிறந்த போதே
இரண்டாவது ஒளி தெளிவாகியது.
அஹ்லுல் பைத்துக்கு.
நீ பிறந்த போதே
அறிவிலின் வாசலும் அறியப்பட்டது.
உம்மிடம் தக்வா தூரமனாதில்லை
தஃவா பெற்றவர்களும் தூரமானதில்லை
நீர் பிறந்த போதே
கைபர் கண்டது நடுக்கம்.
உன்னை பார்த்த எதிரிகளுக்கெல்லாம்
ஏற்பட்டதே திடுக்கம்.
உம் பிறப்பு
எமக்கு எப்படி ஒளியாகியதோ
உம் இறப்பும்
அப்படியே தெளிவாகி வழியாகியது.
உம் பிறப்பில்தான்
என் கவிதைக்கும்
பிறப்பிறக்கிறது புரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக