தீர்வை நீ தேடு

படித்த மகனே!
நீயும் படி!
பாமர மகனே!
நீயும் படிக்க முயற்சி…


குற்றங் குறை கூறி
ஒதுங்கி வாழதே!
முற்றும் முழுதும்
தவறானதென்று
தனித்தும் வாழ நினைக்காதே!

நாளை எங்கும்
ஓடிய ஒழி இயலாது
ஒன்றும் சாட்டு சொல்லி
சாதித்திடவும் முடியாது.

ஏற்றம்.தாழ்வு தேடி
ஆராய்ந்து பார்!
அதன்பின் வாழ்ந்து பார்
உனக்கு எழுற்சி தெரியும்
உலகில் புரட்சி புரியும்.

உண்மை கொல்வதிலும்
பொய்மை வெல்வதிலும்
நீதியை நீ தேடு!
உள்ளதை சொல்வதிலும்
இல்லாததை சொல்வதிலும்.
தீர்வை நீ தேடு!

தப்பிக்க நினைக்காதே
எது உண்மை
எது பொய் என்று
பிரிக்க முடியாது தவிப்பதாக.

இல்லை இல்லை
நிச்சயம் தொல்லையில்லை.

சந்திர மண்டலத்தில்
சாதிக்க நினைக்கிறான்
சாந்தி சந்தேகம் தேடுவதில்
சங்கடமா இந்த நூற்றாண்டில்.

எல்லாம் படி
எதையும் படி
ஒன்றை மட்டும்
பின்னர் பிடி.

உன் ஈமானில்
உனக்கு உறுதியென்றால்
நீயே உனக்கு போதுமானவன்
மறுமையில்
மற்றவரை தடுக்காதீர்.

சந்தேகத்தில்
சறுக்கல் கோடிட்டாலே
குழியில் விழுகிறாய்.

தேவை இருப்பதை
உணர்ந்த போதும்;
தெளிவு படுவதை
ஏனோ மறுக்கிறாய்?

தேடிப்பார்
தெளிவு பெருவாய்
உன் பிடிவாதம்
பிழையென்று…

ஆராய்ந்து பார்
அறிந்திடுவாய்
உன் அகங்காரம்
அறிமையென்று…

வரலாற்றை புரட்டி பார்
வறயரை செய்திடுவாய்
உன் வாய்சத்தம்
வாள் பிடிக்கப்பட்டதென்று…

முயற்சித்துப்பார்
முன்னேறிடுவாய்

சகோதரா!
அளவுக்கு அதிகம் படித்தாலும்
புத்தி தேய்வதில்லை
அதன் பாதை ஓய்வதில்லை
நினைத்தாலும் குற்றமில்லை
நடந்தாலும் தவறுமில்லை

மார்க்கம் படித்து
மடயன் ஆனாலும்.
அதைவிட பாக்கியமுண்டோ!

குழந்தையாக பிறந்தவர்
குழந்தையாக மரணிப்பதில்லை
முரணித்தவர் குழந்தையாக எழுவதுமில்லை

உண்மை ஏற்க மறுப்பிவரின்
உலக ஆயுதம்
ஆய்வுக்கு காட்டுபோடுவது.

பொய்யை வளப்பவரின்
போலிச் சொற்கள்
அறிவில் போதுமென்பது.

சகோதரா!
சத்தமாய் சொன்னது
சத்தியமாய் சொன்னது
உலகின் வேத ஒளி
உன்னால் முடிந்தால்
முடக்கிப்பார் என்று…
முடிந்ததா…

முட்டிப்பார்த்தார்கள்
முதன்மை இலக்கியவாதிகளும்
நாஷ்தீக மோதிகளும்.
முடிந்ததா? முடியுமா?

நேர்வழிக்கு அழைத்தது
மாற்று வழி சென்றவரை
நெருங்கிப் பார் என்று

முறுகிப் போனவரை
முடியுமானால்
முறித்து காட்டு என்றது.

அது போட்டிக்கழைத்தது
மனிதனை அழைய வைக்கல்ல.
நேர்வழிக்கு அழைத்ததுவே!

ஓளிக்கு தெரியும்
ஓராத்தின் வெளிச்சயம்
யாரால் என்று…

தெளிவுக்கு புரியும்
புரியாத மடமை
ஏன் என்று…

அதற்காக…
படி என்னை முதல்
அதன் பின் வா மோதல்

நீ உன்னை
அறியாத போது
உன் பாதையை
எப்படி அறிவாய்?

குருடனுக்கு
மாலிகைக்குள் அழைத்தாலும்
மண் குடிசைக்குள் அழைத்தாலும்
அவன் மனதுக்குள் இருப்பதுதான்
அவனுக்கு மாலிகை.

ஆணிக்கு அடிபட்டால்தான் பலம்
தேடி கண்டால்தான் சுகம்
தெளிவு கண்டால்தான் நிஜம்.

அறியாது குழியில் விழுந்தால்
பயமிருக்கும்
அறிந்து விழுந்தால்
அதில் தப்புவதற்கு
வழி இருக்கும்.

துணிந்து விட்டால்
துரிதம் கண்டிடலாம்.

அதற்காக…
படித்த மகனே!
பாமர மகனே!
உன் பாதை தேடி
நீ பயணி…

பாதையில்
கள்ளும் முள்ளும் வரும்
பயணிப்பதில்
துன்பம் வரும்
இன்பம் வரும்.

தேடும் இலக்கு
தெளிவாகிவிட்டால்
இனித்திடுமல்லவா வாழ்வு!

கருத்துகள் இல்லை: