யார்?

வானத்தை உயர்த்தி
அதன் நிறத்தை நீலமாக்கி
கண் கவரச் செய்தது யார்?

சூரியனை சுடராக்கி
சந்திரனை ஒளியாக்கி
ஓடச் செய்தது யார்?
பருவத்தை நான்காக்கி
பயனடையச் செய்து
மழை கொடுத்து
தினம் தினம் தாவரத்தை
வளரச் செய்தவன் யார்?
புவியை கோலாக்கி
புவிக்குள் கடலை வைத்து
அரைவாசி தரையாக்கி
நடமாடச் செய்தவன் யார்?
கனி ,காற்று,தீ என்று
கற்பனை செய்தவன் யார்?
இவையெல்லாம் நீ
இயற்கையென்றால்
இயற்கையை இயற்றியவன் யார்?
அந்த இயற்கைதான் இறைவன்
இதை ஏன் மறுக்கிறாய்
மனிதா!
ஒன்றுமில்லா உன்னை
சிந்தி…
இறைவனை கண்டிடுவாய்;

கருத்துகள் இல்லை: