ஓர் இரவில் மட்டும்

என் வயதின்
மீண்டுமொரு ரமழானே!
நீ வருக! வருக!


உன்னை கடந்தாண்டுகள்
கள்ளறையாக மட்டும் தெரிகிறது.
வாலிபம் வீணாணது
இன்றுதான் புரிகிறது.
நீ வருக! வருக!

உணமுற்ற உள்ளத்தை
உன்னால்தான்
உயிர்ப்பிக்க வேண்டும்
நீ வருக! வருக!

இச்சைகளால் இழிவுபெற்ற
உடல் இயந்திரத்தை
நீயே இன்பமாக்க வேண்டும்
நீ வருக! வருக!

மனிதனாக
ஓராண்டு வாழவில்லை
உன் ஆயிரம் சிறப்புமிக்க
ஓர் இரவில் மட்டும்
மனிதனாக வாழ்ந்தாலே போதும்
நீ வருக! வருக!

வேதத்தை நீயே பெற்றெடுத்தாய்
அதில் உன் சிறப்பை
கற்றெடுத்தாய்
நீ வருக! வருக!

உலகமே உணவிருக்க
பக்கத்தில் பாலிருக்க
அவனுக்காக…
பக்குவமாயிருப்பதில்
பல சுகமிருக்கு
நீ வருக! வருக!

என் போன்றோரின்
பசி உணராத பணக்காருக்காய்
பட்டினிருந்து பக்குவமாயிரு என்று
சொன்ன உன் தத்துவத்திற்கு
ஈடு ஏதுமில்லை
நீ வருக! வருக!

உன்னை மறந்து
உன் அருளை அனுபவித்து
உனக்கே மாறு செய்த எம்மை
அன்பாட்சி செய்யும்
உன் அரசாட்சிக்கு
அகராதியிலும் சொற்களில்லை
நீ வருக! வருக!


பாவத்தில் மூழ்கிய
கருப்பான கல்புகளை
வெறுப்பாக்கிடாது
ஒரு மாத
அருளை அள்ளி வீசும்
உன் அன்புக்கு
நாங்கள்தான் அடிமைகளாக இருப்பதில்லை
நீ வருக! வருக!

மனம்போன போக்கில்
பாவத்தை சுமந்து
உன்னை பார்ப்பதற்கே
தகுதியில்லா எம்மை
தௌபாவுக்கு அழைத்து
கருணை காட்டும்
உன் கரிசனைக்கு
நாங்களேதான் முஃமின்களாகல்லை
நீ வருக! வருக!

ஒரு மாதத்தை
கருணையென்றும்
மன்னிப்பென்றும்
கூலியென்றும்
குறித்து வைத்த
உன் தெய்வீக கணக்குக்கு
யாருக்குமே இடமேஇல்லை
நீ வருக! வருக!


தந்த உனக்கு
எப்படியெல்லாம்
நன்றி சொல்லனும் ?

மனிதன் நன்றி கெட்டவன்
என்பதில் நானே
எனக்கு ஆதாரம்

மன்னித்திடு
இறiவா ! மன்னித்திடு
உன்னை மறந்த
பாவி என்னை.

உலகில் வாழ்பவரில்
எனக்கென நீ
தந்ததெல்லாம் தகுதியானவை

நீ தடுத்ததெல்லாம்
தயவுக்கானவை

நானே நன்றி கெட்டு
வாழ்ந்து விட்டேன்.

நானே உன்னை மறந்து
மன்னை நேசித்து விட்டேன்

நானே உன்னை தூரமாகி
துரோகம் செய்து விட்டேன்.

இறைவா!
உன் கருணையில்
எனக்கு நம்பிக்கை இருக்கு
நீயே என் எஜமான்

இறைவா!
உன் மன்னிப்பில்
எனக்கு மனறுதிருக்கு
நீயே பிழைபொறுப்பவன்

இறைவா!
வாழத் தகுதியென்றால்
வாழவை
உன்னிடம் வருவதே
தகுதியென்றால்
எடுத்திடுவிடு.

என்னில் பிறர் பாதிக்க
வைத்திடாதே!
பிறரால் என்னை பாதிக்க
விட்டிடாதே!

உனக்கும்
உன் தீனுக்கும்
என்னை அர்ப்பணிக்கச் செய்

இறைவா!
தீனில் கொடு தெளிவை
இன்னுமின்னும் தெளிவை
அதில் என்னை தரிபடுத்தி
அதில் என் உயிரையும்
எடுத்திடு!

கருத்துகள் இல்லை: