என் இனிய ஸலாம்

தூய்மை செய்யும்
ரமலானே!
உனக்கு என் இனிய ஸலாம்


தூய்மைப்படுத்தும்
மனிதனே!
உனக்கும் என் இனிய ஸலாம்.

உன் வைகறையில்
வாழ்வு ஜொலிக்க போகிறது.
நீ வருக! வருக!

சகோதரா!
சற்று அவசரப்படாது
அவதானமாக சிந்தி…

பட்டினிருந்து
பக்குவம் வளர்வதில்லை
தாகித்திருந்து
தலைக்கணம் தனிவதில்லை.

நோன்பு நோக்கப்டுவது
தக்வால் தூக்கப்படுவதற்காக…
உணர்வுகளால் உண்மைப்படுத்துவதற்காக…

நோன்பு நோற்பது
வாய் மட்டுமல்ல
வயிறுமட்டுமல்.

உள்ளத்தை ஒருமித்து
ஒருவனுக்காக
உண்ணாவிரதமிருந்து
உடல்களால் பாதுகாப்பதுவே
நோன்பு…
இது நடந்தாலே மான்பு…

கண்களால் நோன்பிருக்கு
ஹராத்தை பேணுவதில்
வாயினால் நோன்பிருக்கு
வறையரையாய் பேசுவதில்
கைகளால் நோன்பிருக்கு
தவறுகளை தடுப்பதில்
கால்களால் நோன்பிருக்கு
கடமையில் கண்ணியமாயிருப்பதில்
செவியினால் நோன்பிருக்கு
அழகானதை சேமிப்பதால்

நோன்பின் மான்புகளாய்
வணக்கத்தை வசமாக்கி
தொழுகை பேணிவோம்
குரலில் குர்ஆன் ஓதி
பார்வையில் பக்குவப்படுத்திடுவோம்

முஹம்மத் நபி மீதும்
முதுகம் தண்டில் உருவானவர் மீதும்
ஸலவாத்தை சாட்சி சொல்லிடுவோம்

முஸ்லிமுக்கு முகமன் சொல்லி
முகமலர்ந்திடுவோம்
உம்மத்தின் உயர்வுக்காய்
உயர்த்தி உள்ளமஞ்சிடுவோம்.

ஆபாசத்தை அடக்கி
அநீயாயங்களை நீக்கிடுவோம்.

கோபத்தை மறந்து
விட்டுக் கொடுப்பை எடுத்திடுவோம்

அன்பை பரிமாறி
அடக்குமுறையை பணித்திடுவோம்

ஏழ்மையை நோசித்து
செல்வந்தத்தை இறைக்காக
செலவு செய்திடுவோம்

அவசியத்தை முற்படுத்தி
ஆடம்பரத்தை பிற்படுத்திடுவோம்.

பெருமை இழந்து
பொறுமை காத்திடுவோம்.


புறம் புறம்தள்ளி
புரிந்துணர்வை வளர்த்திடுவோம்.

போய் போக்கி
உண்மை அழைத்திடுவோம்.

சுயநலம் கடந்து
பொது நலத்தில் நடந்திடுவோம்.

பிறர் உரிமை கொடுத்து
எம்முரிமை காத்திடுவோம்

உள்ளதை உதவி
இல்லாதவரை இணைத்திடுவோம்.

நோன்பை பேணி
மான்புகளை பெற்றிடுவோம்

தவறுக்கு தௌவ்பா செய்து
தடுப்பதற்கு உறுதியாகிடுவோம்.

தண்டனைக்கு முனாஜாத் செய்து
கண்டனைகளை நினைத்திடுவோம்.

இதுவே நோன்பாகிடும்
பட்டினிருந்து
பாளாக்கிடாது
பாதுகாத்து பயனடைந்துவோம்

கருத்துகள் இல்லை: