நியாயத்தை எங்கே சொல்வேன்

வரலாற்றை புரட்டவும் வேண்டும்

புரட்டியதில் உள்ளவைகளை

புறம் தள்ளவும் வேண்டுமாம்

நியாயத்தை எங்கே சொல்வேன்

நியாய தீர்ப்பு நாளில் தெரியட்டும்

யார் யார் என்ன செய்தார் என்று…

எவர் எவர் என்ன செய்யப் பட்டார் என்று

நானோ சாதரண அடிமைதான்

அதற்காக

அசத்தியத்திற்கும் அடிமையாக இயலாது.

ஆனால்

ஒளியுள்ளவர் ஒதுங்கி போய் விட்டார்கள்

இருளில் இருப்பவர்

சந்திரனுக்கே சென்றும் வந்து விட்டார்கள்.



யாரை சொல்வது

என்னையா

என்னை சார்ந்தோரையா?



குற்றத்தை சுமப்பது இவர்களே

அதகாரி என்று வந்தார்கள்

ஆதி காரத்தை அதிகம்

சம்பாதிப்பதில் அழகாக சுகம் கண்டார்கள்

அதனால் நாங்களே

ஆங்காங்கு அலை மோதும் நிலை



வினா எழுகிறது.

இனிமேல் நாம் சொல்லக் முடியாது

அலியின ; விலாயத்தை அபகரித்தார் என்று

அஹ்லுல் பைத்தை வதைத்தார்கள் என்று

பொதுச் சொத்தை புதைத்தார்கள் என்று



அவர்கள் என்ன செய்தார்களோ

அதை நீங்களும் செய்து விட்டு

நியாயத்தை எப்படி பிரித்தெடுப்பது.



நிறுத்துங்கள் நீங்கள்

அநீயாயம் செய்வதையோ

அல்லது அவர்கள்

அநீயாயம் செய்தார்கள்

என்று சொல்லுவதையோ!!



நீங்களும் அவர்களும்

ஒரு குட்டைக்குள் விழுந்த

வெள்ளைத் துணிகள்தான்.



சிறு சிறு பலனுக்காக

அழுக்கான ஆடையை அணிந்தவர்கள்

நீங்களும்தான் அவர்களும்தான்



சுயநலப் பதவிக்காக

பொது நலப்பதவிகளை

புறம் தள்ளி

புதுப் பதவி நியமித்தவர்கள்

நீங்களும்தான் அவர்களும்தான்



அஹ்லுல் பைத் என்று சொல்லவும்

உங்களுக்கு அருகதை இல்லை

அடுத்தவர்களுக்கு ஏசவும்

அவசியமுமில்லை.

கருத்துகள் இல்லை: