அவனுக்கே நன்றி

அவனுக்கே நன்றி
நண்பராக தந்தற்கு…

உலகில்
உடனிருந்து ஒதிக்கிடுபவர் அதிகம்.
நீர் மட்டும் அதில்
விதி விழக்கு
எனக்கு ஓர் ஒளி விளக்கு…


மறு உலகிலும்
நண்பராக நானேந்தும்
கைகள் வீணாகா

தெளிவு கண்டேன் உம்மில்
தெளிவான நட்பை
உயர்வான பண்பை

எனது நிலைதான் என்ன?
நண்பராக நீர் மட்டும்
இல்லையென்றால்…

அவன் நினைத்தான்
நேர்வழி காட்ட
உம்மை தந்து .
கற்றுக் கொண்டேன்
கல்லூரி செல்லாத
பல பாடம் உம்மில்.

மறப்பதற்கில்லை நான்
நீர் ஆசான் எனும்
அழகிய உறவை .

ஆனாலும; நண்பராக
நான் பெற்ற
பாக்கியம்தான் என்ன?

பாதியில் விட நினைத்த படிப்பு
பட்டப்படிப்பை விட
பல மடங்கு
நீர் கற்றுத் தந்த
அன்றைய அறிவுரை.

உம்மால் பெற்ற நேர் வழி
நிறையவே நிஜத்தை தந்திருக்கு
உம்மைக் காணும் போதே
கண்டுகொண்டேன் உம் பாதை
சரியாக இருக்குமென்று…

சந்தித்தது சாட்சிக்கல்லவா?
சாதித்து விட்டீர்
வெற்றி காட்டி…

நண்பர்
ஆசான்
தோழரென்று
எல்லாம் நீர்தான்
இறைஉதவியாக…

நீர் கற்றுத் தந்தீர்
நஷ்டவாளியென்று
நண்பனில்லாதவனையும்
நண்பரை இழப்பவரையும்
நபி வழியாக…

நீர் கொண்ட
அறிவும்,அடக்கமும்
பக்குவமும்,பாசமும்
பணிவுமே போதும்
நீர் நபிகளாரை
சரியாக சாடுகிறீர்
என்பதற்கு சரியான சாட்சி
அது அலி, ஹ_ஸைனால்
பெற்ற எழுச்சி

நாளை நாம் பெருவோம்
மறு மலர்ச்சி…

கருத்துகள் இல்லை: