தூள் தூளாயிருக்கும்
தூதனுப்பி பறைசாற்றிருந்தால்
பாறங்கல் மலைமீது
இந்த ஒளியை…
தாழ்ந்து போகாதுவன்
உயர்ந்து வாழ
வழிகாட்டினோம்
இந்த புனித புர்க்கானை…
அதன் சுவையோ
சூசகமானதும்
அதன் மொழியோ
அரபானதும்
அதன் உள்ளடக்கம்
உயிருக்கு உயர்வானதும்
எதற்காக?
வாசிக்காதும் ,நேசிக்காதும்
எமது அருளை மட்டும்
வழி தவறி சுவாசிக்கவா
அதிகமாய் ஆக்கிரமிப்பு
அலட்சிய்த்திலும் ஆடம்பரத்திலும்
நாள் தவறாது
அவன் செயல் எது?
சினிமாவும்,சிரழிவுகளும்
சந்தோஷ வரிகளாய்
நாம் கொடுக்க
அமைதி ஆயுதமாய்
நாம் அமைக்க
புறம் தள்ளி
புறழ்கிறான் எங்கே?
ஷைத்தானுடன்
இதன் இனிமையை
இடை விட்டு விட்டும்
தனிமையில் தாகத்தில் விட்டும்
நாவிலும் செவியிலும்
சத்தமாக கேட்பது
சங்கரின் ளழபெ அல்லவா
சிந்திக்காமல் இருக்கலாமிவர்கள்
சந்திக்காமல் எப்படி இருப்பார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக